கொவிட்-19 தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுமாயின் மாணவர்களுக்கு பாடங்களை வீட்டிலிருந்தவாறே நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டே பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை திறப்பதில் தாமதம் ஏதும் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான திகதிகளும் தாமதமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.