சின்னமுத்து மற்றும் ருபெல்லா நோய்களை முற்றாக ஒழித்ததில் இலங்கைக்கு முதலிடம்


தென்கிழக்கு ஆசியாவில் சின்னமுத்து மற்றும் ருபெல்லா நோய்களை முற்றாக ஒழித்து முடித்த முதல் நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டுள்ளன.

இது நமது சுகாதாரத் துறையின் ஒரு மாபெரும் சாதனை ஆகும். இந்த முயற்சிக்கு அர்ப்பணத்தோடு பங்களித்த எமது சுகாதாரத் துறையின் அனைத்துப் பணியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.