Friday, July 3, 2020

பிரான்ஸில் மூன்று ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு! குவியும் பாராட்டுக்கள்.



பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்களை கொண்ட பட்டியலில் 6 தமிழர்கள் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளனத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட 25 பேர் கொண்ட பட்டியலில் 3 ஈழத்தமிழர்களும் 3 தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஈழத்தை சேர்ந்த வீரர்களின் பெயர்கள்
1. திலீப் பாலசுப்பிரமணியம்
2.சுவேந்திரன் சந்திரகுமாரன்
3.அலிஸ்டின் ஜோன்மாரி

தமிழக வீரர்களின் பெயர்கள்
1.தயாநிதி பெனுய்ட்
2.மஹதீர் அப்துல்ரகுமான் 
3.முகமட் முகைதீன்

குறிப்பிட்ட வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!