தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகள் முகங்கொடுக்கும் உரம் மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொடுப்பனவுகள் செலுத்தப்படாததால் உர இறக்குமதி தாமதமாகி உள்ளதாகவும் அறுவடைக்கு உரிய விலை மற்றும் சந்தை வாய்ப்புக்கள் கிடைக்காததால் விவசாயிகள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனவும் இப்பிரச்சினைகளை தீர்த்து விவசாயிகளை பாதுகாப்பேன் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுமக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேற்படி கூட்டத்தினை தொடர்ந்து கடவர தேவாலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட அதேவேளை அங்குள்ள பிள்ளையார் கோவிலையும் மறுசீரமைத்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.