Wednesday, July 1, 2020

தொல்லியல் மையங்களை காப்பதற்கான செயலணியில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்


கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இன்று ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை  கருத்திற்கொண்டு அவர் மேற்படி இணக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவர் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!