Thursday, July 30, 2020

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்கப்பட்டுள்ளது, இது இலகுவாக எடுக்கப்பட்ட தீர்மானம் இல்லை என்று கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூடி இத்தீர்மானத்தை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார் . ஐக்கிய தேசிய கட்சி என்பது என்பது இரண்டு அல்ல மூன்று அல்ல நான்கு அல்ல ஒரு ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே என்றும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்காக என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்றும் கட்சி நல்லது இல்லை என்றால் தயவு செய்து வெளியேறி வேறு கட்சியை உருவாக்கங்கள் என்றும் கட்சியின் உள்ளே இருந்து தீங்கு விளைவிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார் .