இந்த நிலையில், ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா அவ்வப்போது நடனம் ஆடியும், விதவிதமாக உணவுகள் செய்தும் அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
அதேப்போன்று நடிகை வேதிகாவும் தனது புகைப்படங்களையும், நடனம் ஆடிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் டாக்கி டாக்கி என்ற ஆங்கில பாடலுக்கு நடனம் ஆடி அதை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
இருவரும் நடனத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பது தெரியும். இருந்தாலும் இந்த பாடலுக்கு வித்தியாசமாக அதேசமயம் வெவ்வேறு நடன அசைவுகள் உடன் ஆடி அசத்தி உள்ளனர். இருவரது நடனங்களையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.