கடற்படை தளபதி அட்மிரல் பியல் டி சில்வா ஓய்வு பெறுகின்றார்36 வருட சேவையை நிறைவு செய்து ஓய்வுபெறும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா நேற்று, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

2019 ஜனவரி 01ஆம் திகதி கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட பியல் டி சில்வா, இலங்கையின் 23வது கடற்படைத் தளபதியாவார்.

30 வருட போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர் தனது சேவைக் காலப்பகுதியில் வீர விக்ரம, வீர விபூஷன, ரண விக்ரம, ரணசூர, விஷிஷ்ட சேவா விபூஷன உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

தாய் நாட்டுக்காக அவர் செய்த சிறப்பான பணிகளை பாராட்டிய ஜனாதிபதி , அவரது ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

சேவையிலிருந்து ஓய்வுபெறும் பியல் டி சில்வா அவர்களை ஜனாதிபதியே அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்த்தியுள்ளார். நேற்றைய சந்திப்பின் போது அவரும் ஜனாதிபதியும், பாரம்பரியமான நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.