Saturday, July 25, 2020

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வில் அரசாங்கம் சார்பில் தானும் தலையீடு செய்ய போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

தோட்ட தொழிலாளர்களின்  அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில்  அரசாங்க தரப்பிலிருந்து தானும் தலையீடு செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 
ஹப்புத்தலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்தரைத்த அவர், 
அதன்படி, தோட்ட கம்பனிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!