விண்ணப்ப முடிவுத் திகதி ஓகஸ்ட் 31.தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பூரணப்படுத்திய விண்ணப்பங்களை பிடிஎஃப் ஆக தரவிரக்கம் செய்து அதனை அச்சுப் பிரதி எடுத்து விண்ணப்பதாரியினதும் கிராம சேவகரினதும் கையொப்பம் இட்டு, பரீட்சைத் திணைக்களத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
பாடசாலைகளில் இருந்து விடுகை பத்திரம் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக கருதப்படுவர். பாடசாலையில் கற்று கொண்டே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிக்க முடியாது.