Monday, July 6, 2020

விபத்தில் உயிரிழந்த நண்பனுக்காக பல்கலைக்கழக நண்பர்கள் செய்த நெகிழ வைத்த காரியம்


பூநகரியில் நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்த தனது பல்கலைக்கழக நண்பனுக்காக அவரின் நண்பர்கள் செய்த காரியம் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது.

விளையாட்டில் மிகுந்த ஆர்வமிக்க அந்த மாணவனின் உருவப்படமொன்றை வைத்து அவர் பெற்ற பரிசில்கள் அனைத்தையும் அதன் முன் காட்சிப்படுத்தியுள்ளனர் அவரின் பல்கலைக்கழக நண்பர்கள்.

குறித்த மாணவர் பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியைச்சேர்ந்த மோகன் ஆகாஸ் (23) என்பவரே ஆவார். இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணிய அளவியல் பிரிவில் 3ஆம் ஆண்டில் கற்றுவந்துள்ளார்.

குறித்த மாணவர் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார், இவ்வேளையில் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றுடன் விபத்துக்குள்ளான நிலையிலேயே உயிரிழந்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!