Friday, July 3, 2020

நுவரெலியா மாவட்டத்தில் திலகருக்கு முதலாமிடம் விருதினை அறிவித்தது மந்திரி இணைய ஆய்வு

கடந்த 2015 -2019 பாராளுமன்ற காலப்பகுதியில் சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா நுவரெலியா மாவட்டத்தில் முதலிடம் பெற்று விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

மந்திரி.எல்கே ( Manthri.lk) என்ற இணையத்தளம் தொடர்ச்சியாக நடாத்திவரும் இந்த ஆய்வில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகளின் பாராளுமன்ற செயற்பாடுகளின் அடிப்படையில் கட்சி அடிப்படை,மாவட்ட அடிப்படை, தேசிய அடிப்படை என்ற அடிப்படைகளில் தரப்படுத்தல்களைச் செய்து வெளியிட்டு வருகின்றது. 

கடந்த பாராளுமன்ற காலம் முடிவுற்று புதிய பாராளுமன்ற அமர்வுகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கடந்த பாராளுமன்றத்தில் நுவரெலிய மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியிலும் முதலிடம் பெற்றுள்ள இவர் தனது முதலாவது பாராளுமன்ற பிரவேசத்திலேயே தேசிய அளவில் 29 ஆம் இடத்தினைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தனக்கு கிடைத்த இந்த விருதினை நுவரெலிய மாவட்ட மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் இனிவரும் காலங்களில் நுவரெலிய மாவட்டத்துக்கு இத்தகைய ஒரு விருதைப்பெற்றுக்கொடுக்க வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை இவர் சிறப்பாக செயற்பட்டுள்ளபோதும் அந்த மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கட்சியினால் வழங்கப்படாது தேசிய பட்டியலுக்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!