Friday, July 3, 2020

மொரட்டுவயில் ஆரம்பமான கலாநிதி வி.ஜனகனின் பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் பெரும் ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டங்கள் மொரட்டுவை மோல்பே, கடோலன, கீழ் இந்திபெத்த, பகுதிகளில் அண்மையில் நடைபெற்றன.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் கலந்துகொண்டார்.

இதன்போது பிரதேச மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை செவிமடுத்த கலாநிதி வி.ஜனகன், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தார்.

விரைவில் மொரட்டுவ பகுதிக்கான தனது குறைகேள் அலுவலகத்தின் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், தேர்தல் காலத்திற்காக மாத்திரமன்றி தொடர்ச்சியாக அந்த அலுவலகம் மக்களுக்காக திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பல திட்டங்களை ஏற்பாடு செய்த பின்னரே, தான் மக்களை சந்திக்க வந்ததாகவும், வாக்குகளை பெற்ற பின்னர் பிரச்சினைகளை பற்றி ஆராய்வதில் தனக்கு எவ்வித விரும்பமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கல்வி ரீதியாக எதிர்கால சந்ததியினருக்கு பாகுபாடின்றி நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்ப தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் மக்களிடம் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்தம் வழங்கப்படும் நிதியொதுக்கீட்டை கொழும்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் முறையாக பகிர்ந்தளிப்பதே தனது எண்ணமாக இருப்பதாவும் கலாநிதி வி.ஜனகன் இங்கு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு ஐ.டி.எம் நிறுவனத்தின் மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!