Saturday, July 25, 2020

தற்போதைய கல்வி முறையை மாற்றி சிறுவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்களை நீக்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் கூறினர் ...


காலி மாவட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு, பாதாள உலகம் மற்றும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு  முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் சந்திப்புகளில் கலந்துகொண்ட பொதுமக்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டனர்.

இந்த முறை பொதுத்தேர்தலில் பலமான நாடாளுமன்றத்தை அமைத்து மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை செய்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர்  தெரிவிக்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிகளை உறுதிப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் காலி மாவட்டத்தில் பரப்புரையை பணிகளில் ஈடுபட்டதாகவும் , காலி மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய கல்வி முறைமையே உடனடியாக மாற்றி அமைத்து சிறுவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தேவையற்ற அழுத்தங்களை நீக்குமாறு  அம்பலாங்கொடை பியசேன விளையாட்டு அரங்கில் கூடியிருந்த மக்களிடம் ஜனாதிபதிக்கு மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர் .இது விடயம் தொடர்பாக கல்வி கொள்கை ஒன்றை உருவாக்கி அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி தமது ஆலோசனைகளை முன்வைத்த பின்னர் அதனை மக்களிடம் முன்வைப்பதாக ஜனாதிபதி அங்கு தெரிவித்தார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!