கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு கைதிகளை பார்வையிட வந்த 116 பேர் சுய தனிமைப்படுத்தலில்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள கைதிகளைப் பார்வையிடவென, 116 பேர் வருகைத் தந்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் பல்வேறு பிரதேசங்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி சுவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டில் தோன்றியுள்ள நிலையை பொதுவாக கட்டுபடுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (13) காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்தியநிலையத்தில் உள்ள கைதிகளைப் பார்வையிட வந்தவர்கள், பயணித்துள்ள பிரதேசங்களில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவியிருந்தால், அதனை இந்த வாரத்திற்குள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.