கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவது குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (2020.07.10) கொழும்பில் இடம்பெற்றது.
இன்று காலை சுகாதார அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை கொவிட் 19 நோயின் பாதிப்பின்றி எவ்வாறு பாதுகாப்பான முறையில் நடத்தலாம் என விரிவாக ஆராயப்பட்டது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள்ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் முதலானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது பொது மக்கள் எந்தவிதமான பயபீதியும் இன்றி தங்களது வாக்களிப்பு உரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள கொரோனா பீதியில் இருந்து விடுபட தேவையான பாதுகாப்பை சுகாதார துறையினர் வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.