11 நிபந்தனைகளுடன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க உத்தரவு


அனைத்து பல்கலைக்கழக இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் திகதிகளை தீர்மானிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 11 நிபந்தனைகளுடன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

* ஒரு பீடத்தில் ஒரே தடவையில் இரண்டு வருட மாணவர்கள் மாத்திரமே அழைக்கப்படவேண்டும்.

* விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவரே தங்கியிருக்க முடியும். 

* பல்கலைக்கழக மீள் ஆரம்பத்தின்போது வகுப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பரீட்சைகள் எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழக்கப்பட வேண்டும்

* பரீட்சைகளுக்கு முன்னரான எந்தவொரு கல்வி நடவடிக்கையும் நான்கு வாரங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்

* மருத்துவபீட இறுதி வருட மாணவர்களுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்க முடியும். அதற்கான அனுமதியை குறித்த பீடங்கள் மேற்கொள்ளும்.

* பல் வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆகியவற்றின் இறுதியாண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்க முடியும்.

* கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் நேரடியாக விடுதிகளுக்கு செல்ல வேண்டும்.

* பல்கலைக்கழக வளாகம், மாலை 7 மணிக்கு பிறகு எந்த காரணத்திற்காகவும் 
திறக்கப்படமட்டாது.

* விளையாட்டு, சமூக வேலைகள் மற்றும் இதற எந்தவொரு ஒன்றுகூடலுக்கும் அனுமதி இல்லை.

* பல்கலைக்கழகங்களை நடத்திச்செல்ல தேவையான கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது பல்கலைக்கழக உபவேந்தர்களின் தீர்மானமாகும்.

* பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை.