சுயதொழில் உருவாக்கத்திற்குத் தேவையான கடன்,
அறிவு
மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது
என
நேற்று
கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசாங்க பங்காளிக் கட்சிகளினது வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கண்டி
மாவட்டத்திற்கு நேற்று
சென்றிருந்த போதே
மக்களிடம் அவர்
இதனை
தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய கைத்தொழில்களைப் பாதுகாத்து அவற்றை
முன்னேற்ற வேண்டும் எனவும்
அத்தகைய கைத்தொழில்கள் உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பை வழங்கும் அனைத்து சுயதொழிலாளர்களுக்கும் பிரதேச
மட்டத்தில் தேவையான வசதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தனக்கு
பலமான
நாடாளுமன்ற அதிகாரத்தை வழங்குமாறும் அங்கு
மக்களிடம் அவர்
கேட்டுக்கொண்டார்.
தமது
தொகுதிக்கு ஒரு
பிரதிநிதியோ அல்லது
அமைப்பாளர் ஒருவரோ
இல்லாத
காரணத்தினால், தற்போதைய தேர்தல் முறைமையை மாற்றுமாறு கோரிக்கை ஒன்றை
முன்வைத்து சில
பிரதேசங்களின் மக்கள்
தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே
அவர்
இதனை
தெரிவித்துள்ளார்.
மேலும்
மரக்கறிகளை நீண்டகாலத்திற்குப் பாதுகாப்பதற்கு குளிரூட்டி நிலையம் ஒன்றை
தலாத்து ஓய
பிரதேசத்தில் நிர்மாணிக்குமாறும் மக்கள்
கோரிக்கை விடுத்திருந்தனர்.
தோட்ட
மக்கள்
முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு திருப்தியான தீர்வுகளை வழங்குவதாகவும் மக்களிடம் அங்கு
அவர்
உறுதி
அளித்துள்ளார்.
தோட்டப் பாடசாலைகளுக்கும் சுகாதாரத் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதனையும் அவர்
அங்கு
தெரிவித்துள்ளார்.