Friday, July 17, 2020

தேர்தல் முடியும்வரை பாடசாலைகளை மூடி வைக்க தீர்மானம்


தேர்தல்கள் முடியும்வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரபல செய்தி நாளிதழான "டெய்லி மிரர்" செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது கொரோனா வைரசுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையாக அனைத்து பாடசாலைகளையும் தேர்தல் முடியும் வரை ஆரம்பிக்கப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சு வருகின்ற ஒகஸ்ட் 5 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடி வைக்குமாறு கல்வி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததாக அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல்கள் முடியும் போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என சுகாதார அமைச்சு கருதுவதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை கல்வியமைச்சு இன்று மேற்கொள்ளும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!