Wednesday, July 1, 2020

இலவச இணையவழி மருத்துவ ஆலோசனைச் செயலி இலங்கையில்


தெற்காசியாவின் முதலாவது இலவச இணையவழி மருத்துவ ஆலோசனைச் செயலி இலங்கையில் அறிமுகம்.

தெற்காசியாவில் முதன்முறையாக சுகாதார அமைச்சும், இலங்கை வைத்தியர் சங்கமும் இணைந்து "O-Doc" என்ற கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன. 


இந்த செயலி ஊடாக, எவ்வித கட்டணமும் செலுத்தாமல், காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கொவிட் -19 நோய்க்கிருமி நம் நாட்டில் திறம்படக் கட்டுப்படுத்தப்பட்டாலும், சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் சமூக இடைவெளியை பேண வேண்டியது அவசியமாக உள்ளது.

சன நெருக்கடியான மருத்துவமனைகளுக்குச் செல்லாமல், இலவசமாக இந்த செயலியைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு ஜனாதிபதி பரிந்துரை விடுத்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!