Friday, July 10, 2020

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு


அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நான்கு மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதி வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்கும் படி ஆணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேவர்த்தன வினால் இதுகுறித்து ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டதனாலேயே  ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழி வாங்கல் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 16ம் திகதியுடன் நிறைவடைய உள்ளது, இந்த நிலையில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் நிறைவடையாதுள்ளமை காரணமாக ஆணைக்குழுவின் அதிகார காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!