Saturday, July 25, 2020

பொதுத் தேர்தலில் வாக்களிப்பு காலத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் எந்த ஒரு தொழிற்சங்கத்துடனும் நேரடித் தொடர்பைக் கொண்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது, இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசியல் உரிமை இருந்தாலும், இல்லாவிடினும் அனைத்து அரசு ஊழியர்களும் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து பிரிவினரும் எந்த ஒரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுடன் தொடர்புடைய வேட்பாளர்களை ஆயத்தப்படுத்தும் நிகழ்வுகளில் தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது ஆகவே அனைத்து அரசு ஊழியர்களும் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.