Saturday, July 18, 2020

மின் கட்டண சலுகையானது வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் பொருந்தும்

மின்சாரத்துறையில் இதுவரை கிடைக்காத பாரிய சலுகையை தற்சமயம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்கிய எரிபொருள் நிவாரணம் காரணமாக, பெப்ரவரி மாத பட்டியலுக்கான தொகையை, மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும் அறவிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்காக அரசாங்கம் மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த சலுகைகள் வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!