ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து இன்றையதினம் (23) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரை தீர்க்கமான முடிவை பெற்றுக்கொடுக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (23) தமது சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை துறைமுக தொழிற்சங்கமும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.