Monday, July 13, 2020

கண்டி தலதா மாளிகைக்கு ஜனாதிபதி இன்று விஜயம் .

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி தலதா மாளிகைக்கு ஜனாதிபதி இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.தியவதனே நிலமே நிலங்க தேரர் அவர்கள் ஜனாதிபதியை அங்கு வரவேற்றதன் பின்னர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வழிபாட்டு கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்த அவர் , தேரரின் சுகதுக்கங்களை கேட்டறிந்துக்கொண்டார். 

மல்வத்தை அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் மற்றும் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம நாயக்க தேரர் ஆகியோரையும் சந்தித்து, அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடியுள்ளார்.

தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரையும் சந்தித்து ஆசிர்வாதங்களையும் ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்.






Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!