Friday, July 17, 2020

24 மணிநேரத்தில் 167 முறைப்பாடுகள்

கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் 4:00 மணி முதல் 15 ஆம் திகதி பிற்பகல் 4:00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள், தேர்தல்  தொடர்பான 167 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 19 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 148 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 3377 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதில், தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்து மத்திய நிலையத்துக்கு 758 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 2619  முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!