இணைப்பற்ற நாடிக் குழலை (Stethoscope) கண்டுபிடித்துள்ள உயர்தர மாணவன்

உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர், தனது புத்தாக்கத்தில் உருவான இணைப்பற்ற நாடிக் குழலை (Stethoscope) ஜனாதிபதியிடம் இன்று கையளித்தார்.

இன்று, வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவரிடம் அந்த கண்டுபிடிப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.

வெனுர விஜேசேகர என்ற உயர்தர மாணவன், தமது அந்த கண்டுபிடிப்பை ஜனாதிபதியிடம் வழங்கி, அது தொடர்பாக அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்த உபகரணத்தை பரீட்சித்துப் பார்த்த பின்பு, அந்த மாணவனின் திறமையை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

அந்த மாணவன், வெனுர விஜேசேகர, கண்டி திருத்துவக் கல்லூரியில் க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்கின்றார்.

அவர் உருவாக்கிய நாடிக் குழலை இணைப்பின்றி பயன்படுத்த முடியும்.

அதன் மூலம் தனிநபர் இடைவெளியை பேணி நோயாளியைப் பரிசோதிப்பதற்கு வைத்தியருக்கு முடியும்.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்ட பலர் அப்போது அங்கு இருந்துள்ளனர்.