Thursday, July 9, 2020

அமெரிக்க விருது வழங்கும் விழாவில் சிறப்பு பாராட்டு விருதை வென்ற "தி நியுஸ் பேப்பர்" திரைப்படம்.

“தி நியுஸ் பேப்பர்” திரைப்படம் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் இடம்பெற்ற "The IndieFEST Film" விருது விழாவில் சிறப்பு பாராட்டு விருதை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்திற்குக் கிடைத்த விருது,சான்றிதழ் என்பவை நேற்றுமுன்தினம் பிற்பகல், ஜனாதிபதி செலகத்தில் வைத்து,ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 

இத்தாலி அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, லெபனான், சிரியா, சுவிட்சலாந்து மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்த விருது விழாவிற்குப் படைப்புகளைச் சமர்ப்பித்திருந்தன. 

விடுதலை, சமூக நீதி மற்றும் எதிர்ப்பு மனோ நிலையை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக “தி நியுஸ் பேப்பர்” திரைப்படம் The IndieFEST Film குழுவின் பாராட்டுதலைப் பெற்றது.


“தி நியுஸ் பேப்பர்” திரைப்படம் சரத் கொத்தலாவல மற்றும் குமார, திரிமாதுர ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவானதாகும். 

அமைச்சர் பந்துல குணவர்தன, ரவீந்ர குருகே மற்றும் எச். டி. பிரேமசிறி ஆகியோர் இதன் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!