Friday, July 31, 2020

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்


திருக்கோணமலை தம்பலகாமம் பகுதியில் 14 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவரை அடுத்த மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யூனிட்எட்டு ,முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 21வயதுடைய நபரே இக்குற்றச் செயலை செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் தனது சகோதரனின் மனைவியின் தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி உள்ளதாகவும் ,சிறுமி பெற்றோருடன் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் வைத்தியர்களினாள் பரிசோதிக்க ஒரு மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை போலீசார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!