Tuesday, July 7, 2020

மீண்டும் 25 செயலிகளை தடை செய்தது கூகுள் நிறுவனம்



பயனர்களின் பேஸ்புக் உள்நுழைவு விவரங்களைத் திருடுவதாக கூறி சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினா, கூகுளை எச்சரித்ததை தொடர்ந்து சுமார் 25 எண்ட்ரொய்டு செயலிகள் அதிடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. 

குறிப்பாக இப்போது அகற்றப்பட்ட இந்த 25 செயலிகளும் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பேஸ்புக் உள்நுழைவு சார்ந்த விவரங்களைப் பயன்படுத்தும்போது அவற்றை பதிவு செய்கின்றதாகக் கூறப்பட்டுள்ளது. 

இப்போது நீக்கப்பட்ட இந்த 25 செயலி பயன்பாடுகளும் சுமார் 2மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கண்டுள்ளன. குறிப்பாக இந்த 25 செயலிகளில் பெரும்பாலும் பைல் மேனேஜர், பிளாஷ் லைட், வால்பேப்பர் மேனேஜ்மென்ட், ஸ்கிரீன்ஷாட் எடிட்டர் மற்றும் வெதர் உள்ளிட்ட செயலி வசதிகள் ஆகும். 

ஒருவேளை நீங்கள் இந்த 25 செயலிகளை பயன்படுத்தி வந்தால் உடனே நீக்கிவிடுமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரைத்துள்ளது.

நீங்கள் நீக்கம் செய்ய வேண்டிய 25 செயலிகளின் பட்டியல் இதுதான். 

1.Contour level wallpaper 
2.Iplayer & iwallpaper 
3.Wallpaper Level 
4.Super Wallpapers Flashlight 
5.Padenatef
Color Wallpapers 
7.Video maker 
8.Super Bright Flashlight 
9.Pedometer 
10. Powerful Flashlight 
11.Accurate scanning of QR code 
12.Classic card game 
13.Solitaire game 
14.Super Flashlight 
15.Daily Horoscope Wallpapers 
16.Synthetic Z 
17.Composite Z 
18.File Manager
19.Screenshot capture 
20.Wuxia Reader 
21.Junk file cleaning 
22.Anime Live Wallpape 
23.Plus Weather
24.Com.tyapp.fiction 
25.iHealth step counter

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!