பொலன்னறுவை மாவட்ட பிரதேசங்களில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஏனைய குறைபாடுகள் குறித்து மக்கள் நேற்று ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பொலன்னறுவை மாவட்டத்தில் கலந்துகொண்டிருந்தபோதே, இந்த விடயத்தை நேற்று மக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
அதே வேளை சிறியளவில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ள எலஹெர மக்களிடம், சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் அவர்களது தொழிலை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.