Sunday, July 26, 2020


முன் பள்ளிகளை முறைப்படி அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டுவந்து ஒழுங்குபடுத்த நடவடிக்கைகள் எடுப்பேன் -ஜனாதிபதி
கடந்த சில தினங்களாக ஜனாதிபதி பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டு வரும் பொழுது அவரிடம் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை மிக முக்கியமானதாக அனைத்து மாவட்டங்களிலும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் முக்கிய கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலியில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் பொழுதும் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்றும் அப்போது அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம் என்று அவர்களிடம் தெரிவித்தார்.
பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கும் முன்பராய அபிவிருத்தி ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமத்துடன் தரத்துடனும் திட்டமிடப்படும் அதன் அவசியத்தை அங்கு சுட்டிக்காட்டினார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் முக்கிய பணியாக கருதி முன்பள்ளி பாடசாலைகள் முறையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் அவர் அங்கு கருத்து தெரிவித்தார். எமது அரசாங்க கட்சிகளின் சார்பில் பொது தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வெற்றிகளை உறுதி செய்வதற்காக மாத்தறை மாவட்டத்தில் நேற்று மக்கள் சந்திப்பிற்கு சென்றிருந்த பொழுது திரு நிபுண ரணவக்கவின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை உள்ளடக்கிய இணையதளத்தினை இதன்போது அவர் ஆரம்பித்து வைத்தார்.
றுகுனு பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் மாத்தறை மாவட்ட பரப்புரைகளை தொடங்கியபோது உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டார் அப்போது இணைய வழி மூலமாக கற்பித்தல் செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக ஜனாதிபதிக்கு உபவேந்தர் தெரிவித்தார்.
மேலும் தெவிநுவர தேவாலயத்திற்கு முன்பாக உள்ள விளையாட்டு அரங்கில் கூடியிருந்த மக்கள் தமது குடிநீர் பிரச்சனைகளை ஜனாதிபதியிடம் கூறினர் மேலும் தெவிநுவர தேவாலயத்தின் புண்ணியபூமி மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்து தருமாறும் கூறினர் இதுதொடர்பான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.