Wednesday, July 1, 2020

பெற்ற மகளையே குத்திக் கொலை செய்த தாய்!


லண்டன் மிட்சாமில் இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் தான் பெற்ற மகளையே குத்திக் கொலை செய்தபின் தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டனின் மிட்சாமிலுள்ள மொனார்ச் பரடேவில் நேற்று சுமார் 4 மணியளவில் இருவர் இரத்த காயங்களுடன் கிடப்பதாக மெட்ரோ பொலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இருவரையும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் பற்றி பெண்ணின் கணவர் கூறியதாவது, தனது மனைவி தான் மகளை கத்தியால் குத்தியதாகவும் மிகுந்த மனஅழுத்தம் காரணமாகவே அவர் அப்படி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பொலீஸார் குழந்தையின் உடலை பிரேத ப‌ரிசோதனை‌க்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் யாரையும் தேடவோ கைது செய்யவோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குழந்தையின் மரணம் மற்றும் பெண்ணின் காயங்கள் பற்றிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!