Friday, July 31, 2020

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டிஸ் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை ஹொரைதுடுவப் பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஜூலை மாதம் ஐந்தாம் திகதி அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்த 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.