Sunday, July 26, 2020
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற covid-19 தோற்றாளரை கந்தக் காடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி தப்பிச்சென்ற மேற்படி நபர் எட்டு மணி நேரத்தின் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். திருகோணமலையைச் சேர்ந்த இவர் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாக இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.