Wednesday, July 8, 2020

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக 2084 முறைப்பாடுகள் பதிவு

அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற இருக்கின்ற நிலையில் அது தொடர்பான 2084 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும், 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று (07) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 121 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் இதுவரையில் ஒரேயொரு வன்முறை சம்பவம் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!