Wednesday, July 8, 2020

யாழ். தெரிவத்தாட்சி அலுவலக உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு



யாழ்ப்பாணம் தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக இனம் தெரியாத சிலரால் உத்தியோகத்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். 

மேற்படி தாக்குதலுக்கு உட்பட்ட உத்தியோகத்தர் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஷ் என்பவர் ஆவார்.மேலும் இவர் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றிவந்துள்ளார். 

இவர் வழமைப்போல இன்றைய தினம் (08)  கடமைக்கு வரும் போது இவரை பின்தொடந்து நால்வர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். குறித்த அலுவலகத்தின் வாயிலில் உத்தியோகத்தரை வழிமறித்து அவரின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது குறித்த அதிகாரியின் மோட்டார் சைக்கிளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். 
 


தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!