ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் கடலில் மாயம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் கடலுக்கு நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயாகல துடாவ பகுதியைச் சேர்ந்த கடல் பகுதியிலேயே குறித்த இரு பெண்களும் நீராடச் சென்ற போது இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு சம்பவம் தொடர்பில் பயாகலப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .