Sunday, July 5, 2020

அரிசி தட்டுப்பாடை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்காதீர்கள்

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்காதீர்கள் என பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த போகங்களின்போது அதிக அறுவடை கிடைக்கப்பெற்றதாகவும் அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும்  விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

பொலன்னறுவையில்,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகளில் இன்று கலந்துகொண்டிருந்தபோதே விவசாயிகள் இந்த கோரிக்கையை  ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.


அழிவுக்குள்ளாகியிருந்த அரிசிக் களஞ்சியங்களைப் புனர்நிர்மாணம் செய்வதற்கும், நெல்லை முறையாகக் கொள்வனவு செய்வதற்கும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முறைமை ஒன்றை  தயாரித்துள்ளதாகவும் விவசாயிகளிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

மேலும் எதிர்வரும் காலங்களில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளைப் பாதுகாத்துப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய வங்கி மோசடிக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலன்னறுவை மாவட்ட மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் பிரச்சினை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் என்பன பொலன்னறுவை மாவட்டத்தில் அநேக பிரதேசங்களில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளாகும். அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மேலும், மாவட்டத்தில் உள்ள குளங்களைப் புனரமைத்து தருமாறும் அங்குள்ள மக்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

விதை நெல் மற்றும் உரப் பிரச்சினை குறித்தும் அவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!