Wednesday, July 8, 2020

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தடைகள்


தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அரச அலுவலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மேற்கொள்வதற்கு தடை விதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மாகாண சபை அலுவலகங்கள், அரச பாடசாலைகள், உள்ளூர் அதிகார சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகள் வசமுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இடங்களில் பிரசுரங்கள் ஒட்டுதல் பகிர்தல், வாக்குகளை இரந்து கேட்டல் மற்றும் கூட்டங்களை நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!