எதிர்வரும் பொதுத் தேர்தல்,தமிழ் மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக அமையும்- கலாநிதி வி.ஜனகன்

 

எதிர்வரும் பொதுத் தேர்தலானது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ கணேசனுடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 15, அலுத்மாவத்தை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தேர்தலின் ஊடாக எங்களுக்கான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாத பட்சத்தில், அடுத்து அமையப் போகும் பாராளுமன்றம் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதுடன், அதற்கான அறிகுறி இப்போதே தென்படுகிறது என்றும் கலாநிதி வி.ஜனகன் குறிப்பிட்டுள்ளார்.