ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு முன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.



அரசு சொத்துக்கள் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பான புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விளங்கியமையால் கொழும்பு துறைமுகத்தின் முனையத்தை இந்தியாவுக்கு வழங்க நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அதிகாரம் கிடைத்தால் நாட்டில் உள்ள சொத்துக்கள் எதுவும் இருக்காது என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் ,அரசு சொத்து மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்களில் கைச்சாத்து வருவதற்கு முன்னதாக அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் வகையிலான சட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.