சூர்யா நடிப்பில் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று.இத்திரைப்படத்து க்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்திலிருந்து "காட்டு பயலே" பாடலை வெளியிட்ட படக்குழுவினர், இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த ரொமேன்டிக் ப்ரோமோ திரை விரும்பிகளை ஈர்த்து வருகிறது. பாடகி தீ பாடிய இந்த பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.
கிராமத்து பாணியில் இருக்கும் இந்த காதல் பாடலை ரசித்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.