தபால் மூல வாக்களிப்பு - இன்று மூன்றாவது நாள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்றுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

அனைத்து பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படை முகாம்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவு, அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்காக இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படை முகாம்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவு, அனைத்து மாவட்ட செயலக அலுவலகம் மற்றும் தேர்தல் அலுவலக ஊழியர்கள் தபால் மூல வாக்குப்பதிவில் கலந்து கொள்ளவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த தினங்களில் தபால் மூல வாக்குப்பதிவினை அளிக்க முடியாத அரச ஊழியர்களுக்காக மேலும் இரண்டு மேலதிக தினங்களை பெற்றுக் கொடுக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அவர்களுக்கு எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குப்பதிவினை செலுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் ராஜாங்கணை பிரதேச செயலக பிரிவின் தபால் மூல வாக்குப்பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது