கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட தமது கடமைகளில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு



இன்று (17) மதியம் 12.30 மணி முதல் நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை கட்டுப்பத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட தமது கடமைகளில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் M.G.U. ரோஹணவால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பாதுகாப்பு இல்லாமல் கடமைகளைச் செய்ய இயலாமையின் காரணமாக அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.