Thursday, July 9, 2020

கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக குற்றச்சாட்டு

கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வி அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு மாற்றாக மாகாண கல்வி பணிப்பாளர்களால் வேறு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

மேலும் இதனால் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் செயற்படுமாறு மாகாண ஆளுநர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சில அதிபர்கள் ஆசிரியர்களை மீள சேவைக்கு அழைக்கும் விடயத்திலும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சகல ஆசிரியர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும் என கல்வியமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!