இலங்கையில் ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நுவரெலிய, மாத்தளை, முல்லைத்தீவு, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே கூறியுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்த பேராசிரியர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் Z-புள்ளிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படாமல் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையிலேயே தெரிவுசெய்யப்படுவர் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வருட இறுதியில் கட்டுமானப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.