தமிழ் தலைமையை தேடும் இரத்தினபுரி மலையக இளம் சமூகம் - சி.அருள்நேசன்மலையக மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கு இன்றைய இளம் சமுதாயம் முன் வந்துள்ளனர். சகல துறைகளிலும் மாற்றத்திற்கான காலம் இன்று மலையகத்தில் பிறந்துவிட்டது. இன்று பாராளுமன்றம் மாகாண சபைகள் கலைக்கப்பட்ட வண்ணம் காணப்படுகின்றன. முக்கியமாக பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம்  சூடுபிடுத்துள்ள நிலையில் சிறுபான்மையினரின் அரசியல் நகர்வுகள் பிரதான கட்சிகளை சார்ந்ததாகவே தொடர்ந்து காணப்படுகின்றன. 

எனினும் இரத்தினபுரி மாவட்டம் மலையக நீரோட்டத்தில் இணைந்ததாக இருந்தாலும் நமக்கான தமிழ் பிரதிநித்துவம் என்பதுகேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.இன்று படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. பல தோட்ட நிர்வாகங்கள் அரசியல்;வாதிகளின் அரசியல் செல்வாக்குக்குப் பயந்து செயற்;படுகின்றனர். பல்வேறு நெருக்கடிகளை இன்று இளம் சமூகத்தினர் சந்தித்து வருகின்றனர். அரசியல் தலைமைகளை ஒதுக்கி சமூக சிந்தனையுடன் செயற்படும் தலைவனை மலையகம்  தேடுகின்றது. 

மலையகத்தில் இன்றும் சாதிவெறி தீரவில்லை. மலையக தொழிற்சங்கத்திற்குள் அரசியல் கட்சிக்களுக்குள் வெடிப்புக்கள் அடிக்கடி மின்னலாகத் தோன்றுகின்றது. சில மலையகத் தலைமைகளிடம் எவரும் கிட்ட நெருங்கித் தங்களின் பிரச்சினைகளை முன்வைக்கயிலேயே சீறிப்பாய்கின்றனர். இவ்வாறு சீறிப்பாய்ந்தபோது கைகட்டி ஒரு காலத்தில் பெருந்தோட்ட மக்கள் வாய் பொத்தி நிற்கின்றனர். அக்காலம் இன்று மலையேறிவிட்டது. இன்று இளைஞர்களிடம் தடித்த வார்த்தைகளை கக்கிவிடுவார்கள். காலங்கள் மாறிவிட்டன. இதை மலையகத் தலைமைகள் உணரவேண்டும். 


குறிப்பாக இரத்தினபுரி மாவட்டம் பெருந்தோட்டத்;துறை சார்ந்த மாவட்டமாக இருக்கின்ற அதேவேளை தேர்தல் காலங்களில் மலையக மக்களும் பெரும்பான்மை சமூத்தினருடன் இணைந்த வகையிலேயே பார்க்கப்படுகின்றது. எனினும் எமக்கான தனித் தமிழ் பாராளுமன்ற பிரநிதித்துவம் என்பது இலைமறைக் காயாகவே உள்ளது. இதனை முறையாக ஆராய வேண்டியது இன்றைய இரத்தினபுரி தமிழ் வாக்காளர் சமூத்தின் கடமையும்கூட.  1977 இல் ஆகஸ்ட் 22இல் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் குறைகள் பிரச்சினைகளைத் தனது கன்னியுரையில் எவ்வாறு தெரிவித்தாரோää அதே குறைகளே இன்றும் பேசப்படுகின்றன. 

1977 முதல் 2020 வரையிலான 43  வருடங்களாக பொய்யான வாக்குறுதிகளையே மலையக மக்களின் மீது அனைத்துக் கட்சிகளும் திணித்து வருகின்றன. இதை எவராலும் மறைக்க இயலாது. 
இரத்தினபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் பாராளுமன்றத்திற்கு 11 ஆசனங்களைக் கொண்ட 8 தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாக காணப்படுகின்றது. இதில் சிறுபான்மை மக்கள் என்ற தமிழ்ää முஸ்லிம் மக்கள் அன்னவாக 117000 மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இதில் அண்மைய ஆய்வு அறிக்கையின்படி 70 மேற்பட்ட சிறுபான்மை வாக்குகாளர்கள் உள்ளடங்குகின்றனர். 

இதனை முறையாக பயன்படுத்தும் போது நமக்கான பிரநிதியை நாமே தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. மேலும் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்;டத்திலிருந்து முதலாவது சிறுபான்மை பிரதிநிதியாக ஆ.டு.ஆ. அபுசாலி பாராமன்றம் தெரிவானார். அவரே இரண்டாவது தடவையாகவும் 1989 ஆண்டு பொதுத்தேர்தலிலும் தெரிவு செய்யப்பட்டார். எனினும் ஏ.எம்.டி.ராஜன் என்பவர் குறித்த காலப்பகுதியில் தேசியப்பட்டியலில் இடம்பெற்ற தமிழ் பிரதிநிதியாகவே பார்க்கப்படுகின்றார். ஆகவே எமக்கான பிரதிநிதிகள் உருவாவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் அனைத்து கட்சி மட்டங்களிலும் காணப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது. 

இரத்தினபுரி மாவட்டம் தனித்துவிடப்படவில்லையென பலர் வீரவசனம் பேசினாலும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 1 இலட்சத்திற்கு மேற்பட்ட இம்மாவட்டத்தின் குறைகளை தீர்ப்பதற்கான முறையான பிரதிநிதிகள் உருவாவதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம் என்பதுயாவரும் அறிந்த உண்மை;. எனவே ஒட்டுமொத்த (20இலட்சத்திற்கு மேற்பட்ட) மலையக மக்களுக்கும் இன்று தலைவன் இல்லாத நிலையில் ஆண்டாண்டு காலமாக இரத்தினபுரி மாவட்டம் பல அபிவிருத்தி திட்டங்களிலும்ää மக்கள் பிரநிதித் தெரிவு விடயத்திலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றுதஇதனை முறையாக இனங்கண்டு அதற்கான தீர்வைப் பெற வேண்டும்.

பெரும் துன்பவியல் பின்புலத்தைக் கொண்டு இன்று மலையக இளம் சமூகம் வாழ்கின்றது. இவர்கள் கல்வி கற்றுக்கொண்டாலும் முறையான தொழில்வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. உலகம் மாறி வரும் சூழ்நிலையில் மலையக இளம் சமூகமும் மாற வேண்டும். இன்று மலையகத் தோட்டங்களில் நூலகம் இல்லை. நூலகம் அமைத்துத் தர எவரும் முன்வருவதுமில்;லை. தேர்தல் காலங்களில் மட்டும் மலையக இளைஞர்களின் மீது சவாரி புரியும் அரசியல்வாதிகள் தேர்தலின் பின்னர் கைவிடப்பட்டு விடுகின்றனர். இந்நிலை தொடர்கதையாகவே உள்ளது. மலையக இளைஞர்கள் யுவதிகள் ஒரு காலத்தில் விடயம் தெரியாதவர்களாக இருந்தனர். இன்று உலகப்படத்தில் காணப்படும் அனைத்து நாடுகளின் மண்ணிலும் காணபித்து வருகின்றனர். 

உலக மாற்றத்திற்கு ஏற்ற வகையில் பன்னிரண்டு வீதமான மலையக இளைஞர்கள் மாறிவிட்டனர்.இன்று இரத்தினபுரி மாவட்டத்தினை இளைஞர்கள் யுவதிகள் சட்டம்ää வைத்தியம்ää ஊடகம்ää கல்வி என பலதுறைகளிலும் தமக்கான பதிவுகளை பதித்து வருகின்றனர். இந்;நிலையிலேயே மலையக இளஞ்சமூகம் ஏனைய மூத்த சமூகத்தையும் விழிப்படையுமாறு தெரிவிக்கின்றனர். மலையகத் தலைமைகளை எதிர்வரும் கால மாகாணசபைää ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் அறிவிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பிரசாரத்தை மேற்கொண்டால்; இளம் சமூகம் வாக்களிக்குமா? இளம் சமூகம் மலையகத் தலைமைகளை நோக்கி விரல்களை நீட்டுகின்றனர். 

அரசு மலையக மக்களின் பிரதிநிதிகளை நீட்டுகின்றனர். அரசு மலையக மக்களின் பிரதிநிதிகளுக்கே பெரும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றார்கள். அப்படியாயின் இதுவரை காலமும் அரசாங்கத்துடன் உறவாடிய மலையகத் தலைமைகளும் ஏனைய மலையகத் தலைமைகளும் இதற்குப் பதில் தரவேண்டும். இந்நிதி முறையாகக் கையாளப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரம் ரூபாய்கள் பொன்னாடைகளுக்கே செலவிடப்பட்டு இருக்கலாம். முறையாக திட்டமிட்டு அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து இருக்கலாம். 

 எனவே மலையகத் தலைமைகளை ஒருவரியில் விமர்சனம் செய்வதைக் கைவிட்டு அவர்களைப் புறந்தள்ள எண்ணுகின்றனர். மலையகத் தலைமைகளின் ஆட்டத்துக்கு ஆடிய காலம் மறைந்துவிட்டது. சோற்றுப்பார்சலுக்கும் மதுவுக்கும் அடிமையான காலம் மாறிவிட்டது. ஏமாற்றிய காலமும் ஏமாறிய காலமும் தொலைந்து போய்விட்டது. இன்று தலைவர்களை சிந்திக்க வைக்கும் நிலைக்கு தலைவர்களாலேயே இளம் சமூகம் தள்ளப்பட்டவிட்டது. எனினும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திலாவது அதற்கான தீர்வு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகும்.

  வீறு கொண்டு எழுபவர்களே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். என்பதை மலையக இளம் சமூகம் தெட்டத்தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றார்கள். நம்மீது வீசப்படும் கற்களைப் பார்த்து இரத்தகாயம் பட்டு வீழ்ந்து விடக்கூடாது. படிக் கட்டுக்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். முன்னேறிறுவதற்;கான இளம் நேர்மையான தலைவனை இவர்கள் தேடுகின்றனர். அரசியலில் சந்தரப்பவாத சொகுசு வாழ்க்கையைத் தேடாதää விரும்பாத மலையக முழுச் சமூகத்திற்குமான வாழ்;வியலை சாதுரியமாக மாற்றக் கூடிய தலைவனே இன்று மலையகத்திற்குத் தேவையாக உள்ளது. 

 சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் தன்மானம் நிறைந்தவனாக எவன் நடந்து கொள்கிறானோ அவனே தலைவன் என சமூகப் பொறுப்புடன் சமூகம் ஏற்றுக்கொள்ளும்.  இதனை இரத்தினபுரி தமிழ் சமூகம் வரவேற்கின்றதுஇன்று இவ்வாறான தலைவன் மலையகத்தில் இல்லை. அனைவரும் பதவிக்கும் அதிகார ஆசைக்குள்ளும் பந்தாவுக்குள்ளும் நுழைந்துவிட்டனர். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் பல்டி அடிப்பதில் கைதேர்ந்தவர்கள் மலையகத் தலைவர்கள்ää இதுவரை இச்செயலால் எதை சாதித்திருக்கிறார்கள் எல்லாமே பம்மாத்து அரசியலாகவே உள்ளது. எனினும் இரத்தினபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் முறையான தமிழ்; பிரதிநிதித்துவம் இருக்கின்ற போதும் காலகாலம் பெரும்பான்மை சமூகத்தினை வருடி வந்தவர்களாகவே எம் சமூகத்தினர் அடக்கப்பட்டு வருகின்றனர். 

இவற்றை முறையாக தெரிந்து தனியான தமிழ் வாக்களாளர் சக்தியை உருவாக்கி சிறந்த மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க முன்வர வேண்டும். உண்மைää நேர்மையான நம்பகத் தன்மையான செயல்கள் இல்லாமை காரணமாகவே இன்று மலையக இளம் சமூகம் மாற்றுத்தலைமையைத் தேடுகின்றது. இவ்வாறான தகவல்களை மலையகத்தின் அனைத்துக் கட்சிகளும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மனிதாபிமானமும்ää மனித நேயமும்ää மக்கள் சேவகனாக இல்லாத தலைமைகளால் மலையக சமூகம் எதிர்காலத்திலும் முன்னேற்றம் பெறாது. இதிலிருந்து விடுபடுவதற்கு இரத்தினபுரி மாவட்டத்தின் மக்கள் சிந்தித்து எதிர்காலத்தில் வாக்களிக் எத்தனிக்க வேண்டும். 

சி.அருள்நேசன்