கொரோனா வைரஸ் தொடர்பில் வெளிவராத ஐந்து மர்மங்கள்.


கடந்த வருடம் தோன்றி இன்றளவும் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாக இன்னும் விடை காண முடியாமல் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மர்மங்கள் தொடர்பில் பிரபல விஞ்ஞான பத்திரிக்கையான நேச்சர் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதுவரை உலகளவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.10 கோடியை தாண்டியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவதாக தெரியவில்லை.மேலும் உலகெங்கிலும் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளர்கள் ஆபத்தான தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன்முதலில் தோன்றிய இந்த வைரஸிற்கு தேவையான சிகிச்சைகளோ அல்லது தடுப்பூசியோ இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் உருவானதிலிருந்து பல மர்மங்களும் உருவாகியுள்ளது.

விஞ்ஞான இதழான நேச்சர், குறிப்பிட்ட ஐந்து மர்மங்களிற்கு விஞ்ஞானிகள் பதில்களை கண்டறிய வேண்டும் என கூறியுள்ளது.அந்த ஐந்து மர்மங்களின் விபரம் பின்வருமாறு,

1. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அறிகுறிகள் தென்படுவதற்கான காரணம் என்ன?

2. நோயெதிர்ப்பு சக்தியின் தன்மை என்ன, அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

3. ஒரு தடுப்பூசி எந்தளவு சிறப்பாக வேலை செய்யும்?

4. வைரஸ் கவலைப்படக்கூடிய பிறழ்வுகளை உருவாக்கியதா?

5. வைரஸ் உண்மையில் எதிலிருந்து தோன்றியது?