Wednesday, July 1, 2020

"அடவி" குறும்படம் வெளியீட்டு விழா

"நமக்கு நாமே" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான "அடவி" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
பிரபல இயக்குனர் சு.சுகுமாரின் புதல்வன்  இயக்குனர் கேதீஷின் “அடவி“ குறும்படம் சுகாதார பரிந்துரைக்கமைய எளிமையான முறையில் வெளியிடப்பட்டுள்ளது!

Rising K Stars திரைகுழுவின் இரண்டாவது குறும்படமான "அடவி" குறும்படம் இயக்குநர் கேதீஷின் ஏற்பாட்டில் லிந்துல சமர்ஹில் வரவேற்பு அறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை தொகுப்பாளரும் ஆசிரியருமான ஷான் சதீஷ் தொகுத்து வழங்கியிருந்தார். மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியர் பிரின்ஸ் குணநாதராஜா அவர்களும் பிரபல கலைஞரும் நாடகாசிரியருமாகிய திரு.காளிதாஸ் அவர்களும் கலந்துகொண்டதோடு குறும்பட இயக்குநர் திரு .யுவன் அவர்களும் தென்னிந்திய குறும்பட இயக்குநர் திரு.சுரேஷ் கந்தசாமி அவர்களும் எங்க ஊர் ஸ்பெசல் ஊடகவியலாளர் பிரசாந்த் அவர்களும் கராத்தே தற்காப்பு கலை ஆசான் திரு. தினேஷ் உட்பட சிலர் மாத்திரம் கலந்து சிறப்பித்தனர்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை திரு.காளிதாஷ் ,திரு.யுவன்.திரு.சுரேஷ் ஆகியோர் முன்வைத்திருந்தமை சிறப்பம்சமாகும்.

நடிகர்களான திலீபா,கமல்,சஞ்சீவன்,டேவிட் ஜோன் மற்றும் மாறுப்பட்ட வேடத்தில் தர்ஷன் ஆகியோர் சிறப்பாக தங்களின் பங்களிப்பை வழங்கியமை பாராட்டதக்கவிடயமாகும்.அத்தோடு எடிடிங் உதவி வசதியினை சதீஸ் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நன்றி
தொகுப்பாளர் 
திரு.ஷான் சதீஷ் (ஆசிரியர்) 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!